Connect with us

அன்பு மகனுக்கு அழகிய போட்டோவுடன் க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் – குவியும் லைக்குகள்..!!

Cinema News

அன்பு மகனுக்கு அழகிய போட்டோவுடன் க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் – குவியும் லைக்குகள்..!!

தனது அன்புமகனான குகன் தாஸுக்கு க்யூட்டான போட்டோவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் போட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து பதிவு தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் தயாரிப்பாளர் , பாடல் ஆசிரியர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவரது நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் எஸ்.கே விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம் நடிகராக கலக்கி வந்தாலும் மறுபக்கம் பொறுப்பான குடும்ப தலைவராகவும் எஸ்.கே இருந்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவது பிள்ளைக்கு தந்தையாகி உள்ளார் செய்தியை அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டான புகைப்படத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார் .

தனது அன்புமகனான குகன் தாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என செம கியூட்டான போட்டோவுடன் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சிவகார்த்தியனின் இந்த பதிவுக்கு தற்போது லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top