Connect with us

காயம் காரணமாக கில் வெளியேறினார்… ருதுராஜ் சேர்வாரா? கம்பீர்–அகர்கர் முடிவு என்ன?

Sports

காயம் காரணமாக கில் வெளியேறினார்… ருதுராஜ் சேர்வாரா? கம்பீர்–அகர்கர் முடிவு என்ன?

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. முதல் டெஸ்டில் பேட்டிங் செய்தபோது அவருக்கு திடீர் கழுத்து வலி ஏற்பட்டதால் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் இன்னும் மைதானத்துக்கு திரும்பவில்லை. இதனால் 2வது டெஸ்டில் கில் பங்கேற்பாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கில் தொடர்ந்து பல தொடர்களில் ஆடியதால் அவருக்கு ஓய்வு அளிக்கலாம் எனும் தகவலும் வலுவாக வருகிறது. இதன் காரணமாக கில்லின் இடத்தை நிரப்ப யார் வரப் போகிறார் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

பிசிசிஐ கவனத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த முன்னிலையில் இருப்பதாக தகவல். சில ஆண்டுகளாக தேசிய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த ருதுராஜ், தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். புச்சி பாபு, துலீப், ரஞ்சி, இந்தியா A தொடர்களில் தொடர் சதம்–அரைசதங்களால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம், அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றிக்கு வழி நடத்தினார்.

ருதுராஜ் தற்போது ரஞ்சி டிராபியில் நம்பர் 4-ல் விளையாடி வருவது கூட அவருக்கு கூடுதல் ப்ளஸ் பாயிண்ட் என சொல்லப்படுகிறது. எனவே, கில் விலகும் சூழலில் 2வது டெஸ்டில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படும் வாய்ப்பு மிக அதிகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவின் ஸ்டைலிஷ் என்ட்ரி… வீடியோ

More in Sports

To Top