Connect with us

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே பந்துவீசுவாரா? – சூர்யகுமார் யாதவ் கூறிய பதில்

Sports

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே பந்துவீசுவாரா? – சூர்யகுமார் யாதவ் கூறிய பதில்

கான்பெர்ரா,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தயாராகி வருகிறது. ஒருநாள் தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி, டி20 தொடரில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே பந்துவீசுவாரா என்ற கேள்விக்கு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவான பதிலை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“ஷிவம் துபே இந்த தொடரில் நிச்சயமாக பந்துவீசுவார். ஆஸ்திரேலியாவின் மைதானங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஏற்கனவே அவர் பயிற்சியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். தினமும் தனது பவுலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்,” என்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறியதாவது,
“அவருடைய திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் பந்து வீசுவதற்கான வாய்ப்பை பெற்றார். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறேன். ஷிவம் டி20 வடிவத்தில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். இத்தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்,” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

அத்துடன், “துபே தனது பந்துவீச்சுத் திறனை மேம்படுத்த சிறப்பாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பந்துவீச்சு யோசனைகளையும் திட்டங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார். அதன்படி அவருக்கு பந்துவீசும் வாய்ப்பினை வழங்குவேன்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐ.சி.சி. ரேட்டிங்கில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்

More in Sports

To Top