Connect with us

ஐசிசி உலகக்கோப்பை: ஷபாலி வர்மா புதிய உலகச் சாதனை!

Sports

ஐசிசி உலகக்கோப்பை: ஷபாலி வர்மா புதிய உலகச் சாதனை!

மும்பை:
13வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் மோதின.

மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமானாலும், ஓவர்களில் எந்த குறைப்பும் இல்லை. இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இதில் ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் சிறப்பாக ஆடியனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் 299 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதன்முறையாக மகளிர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்திய பக்கத்தில் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருதை பெற்றார்.

இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகி விருது பெற்ற ஷபாலி வர்மாவின் வயது 21 ஆண்டுகள் மற்றும் 279 நாட்கள் மட்டுமே. இதன்மூலம், ஐசிசி ஆண்கள் மற்றும் மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் ஆட்ட நாயகி விருது பெற்ற வீராங்கனை என்ற உலகச் சாதனையை ஷபாலி வர்மா படைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெகுநாளுக்கு பின் மீண்டும் மைதானத்தில் ரிஷப் பண்ட்!

More in Sports

To Top