Connect with us

சஞ்சு சாம்சன் நீக்கம்: ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தி

Sports

சஞ்சு சாம்சன் நீக்கம்: ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தி

புதுடெல்லி,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியுள்ளன. கான்பெர்ராவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹோபர்ட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன — சஞ்சு சாம்சன், குல்தீப், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 74, ஸ்டோய்னிஸ் 64 ரன்கள் என சிறப்பாக விளையாடினர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைப் பெற்றார்.

பின்னர் 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் பிளேயிங் இலெவனிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களும் நிபுணர்களும் கடுமையாக விமர்சிக்க காரணமானது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
“ஜிதேஷ் சர்மா விளையாடுகிறார், ஆனால் சஞ்சு சாம்சன் இல்லை. இதில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவேளை அணிக்கே கூட இதன் காரணம் புரியாமல் இருக்கலாம். சஞ்சு ஆசியக் கோப்பையில் கீழ் வரிசையிலும் மேல் வரிசையிலும் விளையாடி முக்கிய ரன்கள் எடுத்தார். ஆனாலும் ஒரு இன்னிங்ஸுக்குப் பிறகு அவரை நீக்குவது புரியாத முடிவு,” என்றார் அவர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பயிற்சியில் பந்துதாக்கி 17 வயது ஆஸி வீரர் பலி – கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி.

More in Sports

To Top