Connect with us

பிரபாஸ் தாராள மனப்பான்மை கொண்டவர்! Salaar படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் Viral பேட்டி!

Cinema News

பிரபாஸ் தாராள மனப்பான்மை கொண்டவர்! Salaar படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் Viral பேட்டி!

பிரபாஸ் சக நடிகராக மிகவும் சுவாரஸ்யமானவர். அவருடன் நடிப்பதற்காகத்தான் சலாருக்கு ஓகே சொன்னேன். அவர் மிகவும் அன்பானவர், தாராள மனப்பான்மை கொண்டவர். காந்தம் போல இருப்பார். ராஜமௌலி சாருக்கு என் நடனம் பிடிக்கும் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

சலார் படத்தில் நான் கையெழுத்திட்டபோது கதைதான் இங்கு பிரதானம் என்பதை புரிந்து கொண்டேன். அதை அறிந்துதான் உள்ளே சென்றேன். இந்த ஆண்டில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து, பிரபாஸுடன் முடித்தேன்.

இந்த வருடம் மான்ஸ்டர் மெஷின் என்ற ஸ்பெஷல் சிங்கிள், சுய காதலைப் பற்றிய ஒரு பாடலையும் வெளியிட்டேன். ஸ்ருதி விரைவில் The eye என்ற ஆங்கில படத்தில் நடிக்கவுள்ளார். டாப்னே ஷ்மோன் இயக்கும் இப்படத்தில் மார்க் ரோவ்லி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படம் இதுவரை லண்டன் சர்வதேச திரைப்பட விழாவிலும், கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஸ்ருதி, “The eye ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர், இது என் இதயத்திற்கு நெருக்கமானது. தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜூன் மாதத்தில் வெளியாகிறது தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் - வெளியான டக்கர் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top