Connect with us

சஞ்சு சாம்சன் போனதும் RR விற்பனைக்கு — அதிர்ச்சி காரணம்

Sports

சஞ்சு சாம்சன் போனதும் RR விற்பனைக்கு — அதிர்ச்சி காரணம்

2026 ஐபிஎல் மெகா ஏலம் ஒருபுறம் தொடக்கத்திலிருந்து பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், மறுபுறம் இரண்டு ஐபிஎல் அணிகள் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. RCB-க்கு பின் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் விற்பனைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சஞ்சு சாம்சன் RR-இல் இருந்து விலகி CSK-க்கு மாறியது இந்த முடிவின் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை முதன்முதலாக வெளிப்படுத்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா. அவர் தனது சமூக வலைதளத்தில் “ஒரு அணியல்ல, இரண்டு அணிகள்—RCB, RR—விற்பனைக்கு வந்துள்ளன. உரிமையாளர்கள் தங்களுடைய உயர்ந்த மதிப்பீட்டை பணமாக்க விரும்புகிறார்கள்” என பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள மதிப்பீடு (valuation) தான் இந்த விற்பனையின் அடிப்படை காரணம்.

ஒரு அணியின் மதிப்பீடு என்பது வெறும் மைதான விளையாட்டால் நிர்ணயிக்கப்படுவது இல்லை. ரசிகர் ஆதரவு, ஸ்பான்சர் வருவாய், சமூக வலைதள following, மேலும் தோனி, கோலி, சஞ்சு போன்ற பிரபல முகங்களின் ύ ύ ύ தாக்கம் ஆகியவை நேரடியாக மதிப்பை உயர்த்தும். RR அணிக்காக சஞ்சு சாம்சன் இப்படியான ஒரு முகம். அவர் விலகியதால் அணியின் மதிப்பீடு சரிவடையும் அபாயம் உருவானதால், அணி உச்சத்தில் இருக்கும் போதே விற்றுவிடுவது பாதுகாப்பான முடிவு என உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

இதே நிலை RCB-க்கும் பொருந்துகிறது. விராட் கோலி இருப்பதால் அணியின் பிராண்டு மதிப்பு மிக உயர்வில் உள்ளது. ஆனால் கோலியின் எதிர்காலம்—ஓய்வு உள்ளிட்ட—கேள்விக்குறியாகும் முன், Diageo நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பில் RCB-யை விற்பதற்கு திட்டமிட்டுள்ளது. கோலி இல்லாத RCB-யின் எதிர்கால மதிப்பு குறையக்கூடும் என்பதையே அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.

புதிய ஓனர் குறித்து பல பெயர்கள் பரவுகின்றன. புனே, அகமதாபாத், மும்பை, அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், குறிப்பாக Serum Institute தலைவர் ஆதார் பூனாவல்லா RCB வாங்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. RR அணி குறித்து இன்னும் சற்று தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

More in Sports

To Top