Connect with us

உலகக்கோப்பை முடிந்ததும் ஓய்வு பெறும் ரொனால்டோ

Sports

உலகக்கோப்பை முடிந்ததும் ஓய்வு பெறும் ரொனால்டோ

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு தன் விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், “வரும் 2026 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் நேரத்தில் எனக்கு 41 வயதாகி இருக்கும். அது எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். அதற்குப் பிறகு, மீண்டும் உலகக் கோப்பையில் ஆட மாட்டேன். கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக என் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். இன்னும் ஒரு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன் என நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் (Al Nassr) அணிக்காக, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பை, ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை ஆகும்.

தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கையில், ரொனால்டோ இதுவரை 950-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், உலக கால்பந்து வரலாற்றில் மிக அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது ஓய்வு அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரில் முன்னிலை பிடித்த இந்தியா

More in Sports

To Top