Connect with us

நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முறைமாமனுடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம்

Indraja_Shankar_Engagement

Cinema News

நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முறைமாமனுடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம்

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு அவரது முறைமாமனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு பெற்று தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது மூத்த மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்த இந்திரஜா, அதன் பிறகு விருமன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து அசத்தி இருந்தார். இந்திரஜா தனது முறைமாமனை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், சென்னையில் பெரியோர்கள் முன்னிலையில் அவரது திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாகநடைபெற்றது. இதில் நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. எனினும், திருமணம் எப்போது திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top