Connect with us

“ஹீரோவாக நடிக்கும் தொகுப்பாளர் விஜய்! ஹீரோயின் யார் தெரியுமா?!”

Cinema News

“ஹீரோவாக நடிக்கும் தொகுப்பாளர் விஜய்! ஹீரோயின் யார் தெரியுமா?!”

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கவினின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய ’டாடா’ படத்தின் தயாரிப்பாளரான ஒலிம்பியா பிலிம்ஸ் அம்பேத்கர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் RJ விஜய் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

RJ விஜய் இந்த படத்தில் தொகுப்பாளராக அவரது ஒரிஜினல் கேரக்டரில் நடிப்பதாகவும் அஞ்சலி நாயர் பாடகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி 40 நாளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின் தம்பதிகள் இடத்தில் ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை என்றும் ’டாடா’ படம் போலவே இந்த படமும் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தி ராஜா சாப்: பிரபாஸின் ஆறாவது 100 கோடி தொடக்க வசூல், திரையரங்குகளில் கொண்டாட்டம்”

More in Cinema News

To Top