Connect with us

அனல் பறக்கும் ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் புரமோசன்ஸ்..!!

Cinema News

அனல் பறக்கும் ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் புரமோசன்ஸ்..!!

ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் செம கலாட்டாவாக உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது அனல் பறக்க போய்க்கொண்டிருக்கிறது.

ரேடியோவில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒருசில நபர்களில் ஒருவர் தான் சுட்டிக்குழந்தை ஆர்.ஜே.பாலாஜிஆரம்ப காலத்தில் துணை நடிகராக வலம் வந்த இவர் போறபோக்கில் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்து பின்னர் படம் இயக்குவதில் குபீர் என்று குதித்துவிட்டார்.

இதையடுத்து LKG படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி அடுத்தடுத்து 3 படங்களை இயக்கிய அதில் நாயகனாக நடித்து இன்று தமிழ் சினிமாவின் தவரிக்க முடியாத ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் குதூகலமான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன் .

இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ( RJ Balaji ) ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்க இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கி உள்ளது.

அதுவும் குறிப்பாக இந்த படத்திற்காக கதையின் நாயகன் ஆர்ஜே பாலாஜி கொடுக்கும் அனைத்து இண்டர்வூக்களும் செம கலாட்டாவாக இருந்து வருகிறது.

டிஜிட்டல் ப்ரோமோஷன்களில் அதிகம் ஈடுபட்டுள்ள இப்படக்குழு பெரிய சேனல்கள் முதல் சின்ன சேனல் வரை அனைத்திலும் சிங்கப்பூர் சலூன் படத்திற்காக ப்ரோமோஷன் செய்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top