Connect with us

“ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக ரிஷப் ஷெட்டி நியமனம்!”

Cinema News

“ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக ரிஷப் ஷெட்டி நியமனம்!”

ராம்ராஜ் வேட்டிகள் சட்டைகள் நிறுவனத்தின் புதிய அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி அவர்கள் எங்கள் நிறுவனத்தில் அம்பாசிடராக இணைந்திருப்பது எங்களுக்கு பெரிய மரியாதையாகவும் பெருமைமிக்க தருணமாகவும் உள்ளது என்று ராம்ராஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்பதை தாண்டி ஒரு எளிமையான மனிதர் என்றும் அவரது பாரம்பரிய வேர்களுடன் அவர் பாரம்பரிய வேர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் அருண் ஈஸ்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் அம்பாசிடராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி இந்த பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் ராமராஜன் காட்டன் சட்டைகள் மற்றும் வேட்டிகள் ஒரு பிராண்டாக உருவாகியுள்ளது என்றும் எங்கள் ஊர்களில், எங்கள் வீடுகளில் எல்லா நிகழ்ச்சிகளிலும் காட்டன் சட்டைகள் மற்றும் வேட்டிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Cinema News

To Top