Connect with us

ரீல்ஸ், மீம்ஸ் கட்டுப்பாடு – இளையராஜா புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்த தடை!

Cinema News

ரீல்ஸ், மீம்ஸ் கட்டுப்பாடு – இளையராஜா புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்த தடை!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது புகைப்படம், பெயர், “இசைஞானி” பட்டப்பெயர் போன்றவற்றையும் அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திரைப்படங்கள், யூடியூப் ரீல்ஸ், மீம்ஸ், சமூக வலைதள பதிவுகள் போன்றவை இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றன என்றும், இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்றும் ராஜா தரப்பு முறையிட்டது. சில பதிவுகள் அவதூறாகவும் இருப்பதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

illaiyaraja
illaiyaraja

இதனை கருத்தில் கொண்ட நீதிபதி, இளையராஜாவின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக அவரது அனுமதியின்றி பயன்படுத்த தற்காலிக தடை விதித்து, இதுகுறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிடம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தனுஷை நேரடியாக சீண்டிய விக்னேஷ் சிவன்? 😳 நயன் B’day gift வைரல்!”

More in Cinema News

To Top