Connect with us

காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் ஆர்சிபியை வாங்கப் போகிறதா?

Sports

காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் ஆர்சிபியை வாங்கப் போகிறதா?

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 18-வது பதிப்பில், ஆர்சிபி அணி தனது வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை தூக்கி பெரும் சாதனைப் படைத்தது. இந்த வெற்றியை கொண்டாட வேண்டி, அணி நிர்வாகம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விழாவை நடத்த முடிவு செய்தது. அதன் படி ரசிகர்கள் கூட்டத்துடன் அணி வீரர்கள் மைதானத்துக்கு வந்தனர்.

ஆனால் அப்போது ஏற்பட்ட மிகுந்த கூட்ட நெரிசல் பெரும் அனர்த்தமாக மாறி, 11 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர். 50 பேருக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தின் காரணமாக அணி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனையடுத்து மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த சூழ்நிலைக்குள், பிரிட்டனில் தலைமையிடமாக உள்ள டயாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் – ஆர்சிபியின் தற்போதைய உரிமையாளர் – அணியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆர்சிபி அணியின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய பணத்தில் சுமார் ரூ.17,240 கோடியளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

அணியை வாங்க பல பெரிய தொழில் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அதானி குழுமம், ஜே.எஸ்.டப்ள்யூ குழுமத்தின் பார்த் ஜிந்தால், ரவி ஜெய்புரியாவின் தேவ்யானி இன்டர்நேஷனல் குழுமம், மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஆர்வத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இதே நேரத்தில், கேஜிஎப், காந்தாரா, சலார் போன்ற பிரபல படங்களை உருவாக்கிய ஹாம்பலே பிலிம்ஸ் நிறுவனமும் ஆர்சிபி அணியை கைப்பற்றுவதற்காக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புரோமோஷனில் பின்வாங்குவது சரியா? தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்!

More in Sports

To Top