Connect with us

ஐபிஎல் 2026: ஆர்சிபியின் ஹோம் மைதானப் போட்டிகள் மாற்றப்படுகிறதா?

Sports

ஐபிஎல் 2026: ஆர்சிபியின் ஹோம் மைதானப் போட்டிகள் மாற்றப்படுகிறதா?

பெங்களூரு,
இந்த ஆண்டு நடைபெற்ற 18வது ஐபிஎல் (IPL 2025) தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, 17 ஆண்டுகளாக காத்திருந்த முதல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. ரசிகர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேரின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்மையில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் பெங்களூருவில் நடைபெற இருந்த ஆட்டங்களும் நவிமும்பைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் உள்ளூர் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புனேவில் அந்த ஆட்டங்களை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இது உறுதியானால், ஆர்சிபி தனது புதிய ஹோம் மைதானமாக புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “சின்னசாமி தான் ஆர்சிபியின் அடையாளம்” எனக் கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொல்கத்தா அணியிலிருந்து இவரை நீக்க வேண்டும்: முன்னாள் ஆஸி கேப்டன்

More in Sports

To Top