Connect with us

திமுக அரசை கேள்வி கேட்கும் ராமதாஸ்…பதில் கிடைக்குமா??

Politics

திமுக அரசை கேள்வி கேட்கும் ராமதாஸ்…பதில் கிடைக்குமா??

பிகார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும் கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன…இது பெரும் பேசுபொருளாக மாறி வருகின்றது…

தமிழக அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமாக சாதி வாரி மக்க்ள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகின்றது…எனவே தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்..இந்த கருத்துகளுக்கு பல விமர்சனம் வருகின்றது என்றும் சொல்லலாம்…

இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவின் சமூகநீதி தொட்டில் தமிழ்நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..

இரண்டாம் தலைமுறை சமூகநீதி இப்போது பிகார் கர்நாடகத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் சுற்றி கொண்டிருக்கிறது..இன்னும் பல மாநிலங்களிலும் கருக் கொள்கிறது ஆனால் சமூகநீதியின் தாய் என சொல்வது தமிழ்நாட்டின் பெயராகும்..

தமிழ்நாடு என்ற தொட்டிலில் சமூகநீதியாவது இருக்கிறதா என எட்டிப் பார்த்தேன் அது ஆடாமல் காலியாகக் கிடந்தது இரும்புக் கட்டில் என்பதால் ஆட மறுக்கிறதோ என்று ஆட்டிப் பார்த்தேன் அந்தத் தொட்டில் துரு பிடித்துக் கிடந்தது என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்…இவரின் இந்த பதிவுக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் அதிகமாக இருந்து வருகின்றது..என்ன மாற்றம் வரும் என பொறுத்து இருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top