Connect with us

அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினியின் குடும்பம் – வைரல் வீடியோ

Cinema News

அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினியின் குடும்பம் – வைரல் வீடியோ

உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஒருவராக இருக்கும் அம்பானி வீடு திருமணத்தில் பங்கேற்பதற்காக ஜாம்நகர் சென்றிருக்கும் நடிகர் ரஜினியின் வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டத்திலேயே நம்பர் 1 பணக்காரராக வலம் வரும் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா கலைக்கட்டியுள்ளது.

இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலரும் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டிருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் கடந்த 2 நாட்களாக இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் இன்று அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகருக்கு சென்றுள்ளனர்.

ரஜினிகாந்த் , லதா ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டிருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் உயருமா லக்னோ..? இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top