Connect with us

பிரம்மாண்டமாக நடைபெற போகும் ‘புஷ்பா 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – வெளியானது டக்கர் அப்டேட்..!!

Cinema News

பிரம்மாண்டமாக நடைபெற போகும் ‘புஷ்பா 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – வெளியானது டக்கர் அப்டேட்..!!

சுகுமார் இயக்கத்தில் சுறுசுறுப்பாக உருவாகி உள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள திரைப்படமே புஷ்பா 2 . சுகுமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதைவிட பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வரும் 17ம் தேதி மாலை 6.03க்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 Ranveer Singh Pairing! Sara Arjun Salary News-க்கு Fans Shock! 😳💰

More in Cinema News

To Top