Connect with us

மகளிர் உலகக்கோப்பை சாதனை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு!

Sports

மகளிர் உலகக்கோப்பை சாதனை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு!

மொகாலி,
மும்பை புறநகரில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்றில் முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. மழையால் தாமதமான இந்த ஆட்டத்தில் ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். தென் ஆப்பிரிக்கா அணி 246 ரன்களில் சுருண்டது.

இந்த வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல அரசியல் தலைவர்களும் விளையாட்டு பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோருக்கு தலா ரூ.11 லட்சம் பரிசும், பீல்டிங் பயிற்சியாளர் முனிஸ் பாலிக்கு ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆசிய ரைசிங் ஸ்டார்ஸ் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியீடு!

More in Sports

To Top