Connect with us

விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் – தயாரிப்பாளர் கொடுத்த டக்கர் அப்டேட்..!!

Cinema News

விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் – தயாரிப்பாளர் கொடுத்த டக்கர் அப்டேட்..!!

வெந்து தணிந்தது காடு படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ளார்.

கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் சிம்புவின் மிரட்டலான நடிப்பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு .

ஆக்சன் காதல் ரொமான்ஸ் என அணைத்து ஜானர்களும் கலந்த கலவையாக இருந்த இப்படம் ரசிகர்ளின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் கேள்வி மேல் கேட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் இதன் காரணமாக சிம்பு இவரது தயாரிப்பில் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது கொடுக்கப்பட்ட புகாரில் சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் எங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இப்பிரச்னைக்கு தீர்வு கண்டதும் ‘வெந்து தணிந்தது காடு’ 2ம் பாகம் உருவாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top