Connect with us

பிரதிகா ராவல் காயம்: புதிய தொடக்க வீராங்கனை தேடும் இந்திய அணி – மிதாலி ராஜ் பரிந்துரை

Sports

பிரதிகா ராவல் காயம்: புதிய தொடக்க வீராங்கனை தேடும் இந்திய அணி – மிதாலி ராஜ் பரிந்துரை

மும்பை,
மகளிர் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டமாக மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது, இதனால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 27 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளர்களில் ராதா யாதவ் 3 விக்கெட்டும், ஸ்ரீசரணி 2 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 8.4 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் தொடரில் மழையால் பாதியான 6வது ஆட்டமாக இது அமைந்தது.

இதற்கிடையில், பீல்டிங்கின்போது இந்தியாவின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் வலது கணுக்காலில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். அதன் காரணமாக அவர் பேட்டிங் செய்யவில்லை. தற்போதைய தகவலின்படி, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது.

அவரது காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரையிறுதியில் பிரதிகா ராவல் இல்லாத நிலையில், ஹர்லின் டியோல் ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக ஆடலாம் என முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் இன்று தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

More in Sports

To Top