Connect with us

“பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள Salaar படத்தின் Trailer ரிலீஸ் தேதி?! வைரல் வீடியோ!”

Cinema News

“பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள Salaar படத்தின் Trailer ரிலீஸ் தேதி?! வைரல் வீடியோ!”

KGF என்கிற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து அதன் இரண்டு பாகங்களையும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியவர் பிரசாந்த் நீல். அவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் தான் சலார். KGF படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார்.

சலார் படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட இப்படம் தற்போது ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வருகிற டிசம்பர் 22-ந் தேதி சலார் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்துக்கு போட்டியாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள டுங்கி திரைப்படமும் திரைக்கு வர உள்ளது. இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால் நாடு முழுவதும் இந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. சலார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.

அதன்படி சலார் படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 1-ந் தேதி இரவு 7.19 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டீசரே மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தின் வெற்றியை நடிகர் பிரபாஸ் மலைபோல் நம்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top