Connect with us

உயிரோடுதான் தான் உள்ளேன்.. இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே

Poonam_Pandey

Cinema News

உயிரோடுதான் தான் உள்ளேன்.. இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியான நிலையில், தான் உயிருடன் உள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல உயிர்களை பலிவாங்கியுள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இது செய்யப்பட்டது என்றும் இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் வெளியானது. இதனால் இந்த தகவலை உண்மை என நம்பிய பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பதிவில் மேலும், “உங்கள் அனைவருடனும் முக்கியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் – நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகமாக, அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது.

இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத பெண்கள் பலர் உள்ளனர். மற்ற சில புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது.

யாரும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன. இந்த நோய் குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மேலும், ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top