Connect with us

ராமர் கோவில் திறப்பு விழா: அயோத்தி புறப்பட்ட பிரபலம்! Viral!

Cinema News

ராமர் கோவில் திறப்பு விழா: அயோத்தி புறப்பட்ட பிரபலம்! Viral!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்னை விமான நிலையம் செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களுக்கு ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அக்ஷய்குமார், அஜய் தேவ்தான், அனுபம் கேர், சன்னி தியோல் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்னிந்திய பிரபலங்களான மோகன்லால், ரிஷப் ஷெட்டி, ராம்சரண் தேஜா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்றவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ் காமெடி நடிகர் தனுஷ் ஆகியோர்களுக்கும் பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைவரும் தவறாமல் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Netflix-ல் ‘Made in Korea’! தமிழ்நாட்டிலிருந்து கொரியா வரை செண்பாவின் கனவு பயணம்”

More in Cinema News

To Top