Connect with us

பராசக்தி இறுதி வசூல்: ரூ.90 கோடியா? ரூ.100 கோடியா? — ரசிகர்கள் மத்தியில் விவாதம் 🎬🔥

Cinema News

பராசக்தி இறுதி வசூல்: ரூ.90 கோடியா? ரூ.100 கோடியா? — ரசிகர்கள் மத்தியில் விவாதம் 🎬🔥

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம், வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டங்களை மையமாக கொண்டு படம் உருவாகிறது என்ற தகவல் வெளியான நாளிலிருந்தே, சமூக அரசியல் பின்னணியுடன் கூடிய வலுவான படமாக இது அமையும் என ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசை, ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்தது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.

ஆனால் படம் வெளியான பின்னர், அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சமூக வலைதளங்களில் படம் குறித்து கலவையான கருத்துகள் பரவியதுடன், கடுமையான ட்ரோல்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த நிலையில் அதன் இறுதி வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, பராசக்தி திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், படக்குழு தரப்பில் இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் உண்மையான இறுதி வசூல் எது என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு 🎬🔥

More in Cinema News

To Top