Connect with us

பொங்கலுக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’: டப்பிங் தொடங்கிய சிவகார்த்திகேயன்

Cinema News

பொங்கலுக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’: டப்பிங் தொடங்கிய சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமான ஜனவரி 14–ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் டப்பிங் தொடங்கிய காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

வெளியான வீடியோவில் சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் காட்சிகளும், திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணி உருவாக்கும் முதல் படம் என்ற சிறப்பு இந்த படத்திற்கு உண்டு. இசையை ஜி.வி. பிரகாஷ் அமைக்கிறார். ‘பராசக்தி’ வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் புதிய படம் “Sathyavan Savithiri” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.

More in Cinema News

To Top