Connect with us

இலங்கையை தோற்கடித்து ஆசியக் கோப்பை இறுதிக்கு நுழைந்தது பாகிஸ்தான்.

Sports

இலங்கையை தோற்கடித்து ஆசியக் கோப்பை இறுதிக்கு நுழைந்தது பாகிஸ்தான்.

தோகா:
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை T20 தொடர் தற்போது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கடுமையான போட்டியில் மோதின.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது. அணியின் சார்பில் விக்கெட் கீப்பர் காசி கோரி 39 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

இலங்கை பந்து வீச்சாரர்களில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டுகளும், டிரவீன் மேத்யூ 3 விக்கெட்டுகளும் எடுத்து பாகிஸ்தான் அணியை கட்டுக்குள் வைத்தனர்.

154 ரன்கள் இலக்குடன் விளையாடத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும், நடுப்பகுதியில் விக்கெட் இழப்புகள் அதிகரித்தன. முழு 20 ஓவர்களும் முடிவடையும் நேரத்தில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணியில் மிலன் பிரியநாத் ரத்நாயக்க 40 ரன்கள் சேர்த்து அணியை நிலைப்படுத்த முயன்றார். பாகிஸ்தான் பந்து வீச்சில் சாத் மசூத் மற்றும் சுபியான் முகீன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் அணி நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வங்காளதேசத்துடன் மோத உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆஷஸ் முதல் டெஸ்ட் இரண்டே நாளில் முடிவு: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

More in Sports

To Top