Connect with us

எங்கள் Emergency படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது – உருக்கமான அறிவிப்பை வெளியிட்ட கங்கனா..!!

Cinema News

எங்கள் Emergency படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது – உருக்கமான அறிவிப்பை வெளியிட்ட கங்கனா..!!

நடிகை கங்கனா எழுதி இயக்கி உள்ள எமர்ஜென்சி திரைப்படத்திற்கு பல போராட்டங்களுக்கு பின் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத் . தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் அரசியலிலும் கால் பதித்து இன்று எம்.பியாக இருந்து வருகிறார்.

ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் பணி என இரண்டையும் சிறப்பாக செய்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படமே ‘Emergency’.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கங்கனா இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசிற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எங்கள் Emergency திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்; விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவிற்கும் நன்றி என உருக்கமான தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Cinema News

To Top