Connect with us

Oscar வென்ற ‘Parasite’ பட நடிகர் லீ சுன் கியுன் மர்மமுறையில் மரணம்!

Cinema News

Oscar வென்ற ‘Parasite’ பட நடிகர் லீ சுன் கியுன் மர்மமுறையில் மரணம்!

பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’பாரசைட்’. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் லீ சுன் கியுன். 2001ஆம் ஆண்டு வெளியான ‘லவ்வர்ஸ்’ என்னும் சிட்காம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு இவர் நடித்த ‘எ ஹார்ட் டே’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக இந்த ஆண்டு வெளியான ‘ஸ்லீப்’ என்ற திகில் படத்தில் நடித்திருந்தார். 48 வயதாகும் லீ, இன்று (டிச 27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக லீ, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் இருந்து வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம், போலீஸ் விசாரணைக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதன் மூலம் என்மீது நம்பிக்கை வைத்த மக்களையும், என் குடும்பத்தையும் ஏமாற்றியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் லீ சுன் கியுனின் மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top