Connect with us

ஒலிம்பிக் 2028: கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பு சந்தேகம் – ஐசிசி நிபந்தனை!

Sports

ஒலிம்பிக் 2028: கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பு சந்தேகம் – ஐசிசி நிபந்தனை!

துபாய்:
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் இடம்பெற உள்ளது. உலகளவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது, அதன் பிரபலத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்க செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை குறுகிய காலத்திற்குள் எவ்வாறு நடத்துவது என்ற விவகாரம் தொடர்பாக, ஐசிசி மற்றும் ஒலிம்பிக் அதிகாரிகள் துபாயில் ஆலோசனை நடத்தினர். அதில், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளாக தலா 6 அணிகள் பங்கேற்கும் வகையில் மொத்தம் 12 அணிகள் பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில், T20 தரவரிசையில் முதல் 6 அணிகளை நேரடியாக தேர்வு செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டு, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் சிறந்த அணிகள் தேர்வு செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆசியாவிலிருந்து இந்தியா, ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து, ஓசியானாவில் இருந்து ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவில் இருந்து தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் நாடாக அமெரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.

இதனால் பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு ஒலிம்பிக்கில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது ஒலிம்பிக்கில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பார்வையாளர் வரவை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் அணியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது – பரிந்துரைகள் பட்டியல் வெளியிட்டது ஐசிசி

More in Sports

To Top