Connect with us

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம்..!!

Cinema News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம்..!!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி இறுதிக்கட்ட தீர்ப்பு வழங்க உள்ளதாக குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் வரை தான் கால் தடத்தை பதித்து பெயரையும் புகழையும் பெற்று பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜிகாந்த்தை கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்தனர்.

இதையடுத்து இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டாரும் எத்தனையோ முறை முயன்ற போதிலும் இருவரும் சேர்ந்து வாழ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரான இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ல் தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top