Connect with us

புகழ்பெற்ற நேரு ஸ்டேடியம் இடிக்க தீர்மானம்!

Sports

புகழ்பெற்ற நேரு ஸ்டேடியம் இடிக்க தீர்மானம்!

புதுடெல்லி, 1982ஆம் ஆண்டு கட்டப்பட்ட டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், சுமார் 60 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதியுடன் அமைந்துள்ளது. அந்நாண்டிலேயே ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு நடைபெற்றன. சர்வதேச தரத்திலான தடகள வசதிகளுடன், கால்பந்து மைதானமும் இதில் இருந்தது. 1984 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் இங்கே நடைபெற்றது. பின்னர், கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருத்தமில்லை என தீர்மானிக்கப்பட்டதால், மைதானம் மற்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கே பயன்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. சமீபத்தில், உலக பாரா தடகள போட்டிகளும் இங்கு நடைபெற்றன.

இந்நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் நேரு ஸ்டேடியத்தை இடிக்க தீர்மானித்துள்ளது. 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய “விளையாட்டு நகரம்” ஒன்றை உருவாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் தடகளம் உள்ளிட்ட பல சர்வதேச தரத்திலான விளையாட்டு போட்டிகளை நடத்த தேவையான அனைத்து அமைப்புகளும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகியதால்… மாற்று வீரர் தேர்வில் அவசர ஆலோசனை

More in Sports

To Top