Connect with us

நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

Cinema News

நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாகி அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . ஒருபக்கம் சினிமா மறுபக்கம் காஸ்மெட்டிக் உள்ளப்பட பல தொழில்களை செய்து வரும் நடிகை நயன்தாரா அனைத்தும் இடையில் தனது இரட்டை குழந்தைகளையும் எந்த குறையும் இல்லாமல் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’ இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது .

இதையடுத்து நடிகை நயன்தாரா தற்போது தமிழில் நடித்து வரும் படம் தான் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் , யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உளப்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா உள்ளிட்ட மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Cinema News

To Top