Connect with us

“நானியின் Hi Nanna OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போ தெரியுமா?!”

Cinema News

“நானியின் Hi Nanna OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போ தெரியுமா?!”

இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் டோலிவுட்டின் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் இந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற அந்த திரைப்படமும் வெள்ள பாதிப்புகளால் தமிழ்நாட்டில் சரியாக ஓடவில்லை.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை. நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் தந்தை பாசம், காதல் என எமோஷன்களின் கலவையாக வெளியான ஹாய் நான்னா திரைப்படம் ஃபீல் குட் மூவி என கொண்டாடப்பட்டது. தென்னிந்திய திரைப்படங்கள் 4 வாரங்களில் OTTக்கு வந்து விடும் நிலையில், ரசிகர்கள் வெயிட் பண்ணி ஓடிடியிலேயே பார்த்து விடும் நிலை உருவாகி உள்ளது.

வரும் ஜனவரி 4ம் தேதி நெட்பிளிக்ஸ் OTTயில் ஹாய் நான்னா திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

ஓடிடியில் இந்த வாரம் அன்னபூரணி, பார்க்கிங் உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில், வரும் ஜனவரி 4ம் தேதி ஹாய் நான்னா வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனிமல் மற்றும் சலார் உள்ளிட்ட படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top