Connect with us

இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகை நந்திதா ஸ்வேதா உறுதி

Nandita_Swetha

Cinema News

இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகை நந்திதா ஸ்வேதா உறுதி

திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற நடிகை நந்திதா ஸ்வேதா பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இனி அந்த மாதிரி படங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

2008இல் கன்னடத்தில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நந்திதா ஸ்வேதா. அதன் பிறகு 2012இல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த நந்திதா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு 2016இல் தெலுங்கில் அறிமுகமான நந்திதா, தொடர்ந்து இருமொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த 2023இல் மட்டும் இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். மேலும், அடுத்து ஒரு வெப் சீரீஸிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நந்திதாவை பத்திரிகையாளர்கள் சந்தித்துள்ளனர். அப்போது தொடர்ந்து பேய் அல்லது திகில் படங்களிலேயே நடித்து வருவதால், இந்த வெப் சீரீஸும் பேய் சம்பந்தமானதாக இருக்குமா என பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த நந்திதா ஸ்வேதா, இது பேய் சம்பந்தமானது அல்ல என தெரிவித்ததோடு, இனி அந்த மாதிரி பேய் படங்களில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வழக்கம்போல் அசத்திய மாணவிகள் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

More in Cinema News

To Top