Connect with us

தற்கொலை செய்ய நினைத்த இசையமைபாளர் AR Rahman..! Shocking தகவல்!

Cinema News

தற்கொலை செய்ய நினைத்த இசையமைபாளர் AR Rahman..! Shocking தகவல்!

கோலிவுட்டில் தனிக்காட்டு ராஜாவாக இளையராஜா வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு எதிராக களமிறக்கிவிடப்பட்ட குதிரை தான் AR ரகுமான்.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை பிரமிக்கவைத்த இவர், அதன் பின் பல ஹிட் ஆல்பம் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். குறிப்பாக AR ரகுமான் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் AR ரகுமான் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா, “நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த மாதிரியான எண்ணம் தோன்றாது” என என்னிடம் கூறினார்’.

‘உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம். இந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கை உடன் உங்களை பயணிக்க வைக்கும்’ என்று AR ரகுமான் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Cinema News

To Top