Connect with us

🔥 ‘தாய் கிழவி’ – பெண்மையின் வலிமையை கொண்டாடும் மனதை கொள்ளை கொள்ளும் படம்!

Cinema News

🔥 ‘தாய் கிழவி’ – பெண்மையின் வலிமையை கொண்டாடும் மனதை கொள்ளை கொள்ளும் படம்!

“தாய் கிழவி” படம் சாதாரண குடும்பக் கதையைத் தாண்டி, பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை உற்சாகமாக பேசும் சக்திவாய்ந்த படமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. ராதிகா சரத்குமார் ‘பவுனுதாயி’ கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆழமான உணர்ச்சியும் மாஸ் எநர்ஜியும் கலந்த மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து பின்னணி, இயல்பான நகைச்சுவை, குடும்ப உறவுகளின் உண்மை முகம் ஆகியவை படத்தை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் பெண்களின் வாழ்க்கை தேர்வுகள் மற்றும் சுயநிலைத்தன்மையை சுலபமாகவும் சக்தியாகவும் சொல்லியிருப்பது பாராட்டுகளை குவித்து வருகிறது. குறிப்பாக “பெண்கள் தங்களுக்காக வாழ வேண்டும்” என்ற கிளைமாக்ஸ் மெசேஜ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தை ஒரு சாதாரண எண்டர்டெய்னராக அல்லாமல் சமூகத்துக்கு தேவையான படமாக உயர்த்தியுள்ளது. மொத்தத்தில், நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் வலுவான கருத்துடன் நீண்ட நாள் நினைவில் நிற்கும் கொண்டாட்டமான திரைப்படமாக “தாய் கிழவி” அமைந்துள்ளது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  62 கோடி வசூல் செய்த “தாய்கிழவி”… குடும்பங்களின் பெரிய வரவேற்பு!

More in Cinema News

To Top