Connect with us

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Kalki 2898 AD’ படத்தின் Release தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!

Cinema News

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Kalki 2898 AD’ படத்தின் Release தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி 2898 ’ ஆகிய இரண்டு படங்களில் கமல்ஹாசன் நடித்து முடித்துவிட்டார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் வில்லனாக நடித்த ’கல்கி 2898AD’ என்ற படம் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் வித்தியாசமான வில்லன் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் - நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

More in Cinema News

To Top