Connect with us

முகமது ஷமியின் முன்னாள் மனைவி: ரூ.4 லட்சம் மாதச் செலவுக்கு போதவில்லை!

Sports

முகமது ஷமியின் முன்னாள் மனைவி: ரூ.4 லட்சம் மாதச் செலவுக்கு போதவில்லை!

கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹான் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து இருவருக்குமிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், 2018ஆம் ஆண்டு இருவரும் பிரிவுத் தீர்ப்பு பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஹசின் ஜஹான், தன்னுக்கும் மகளுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், முகமது ஷமி தனது முன்னாள் மனைவிக்கும் மகளுக்கும் மாதம் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் தற்போது அந்த தொகை போதவில்லை எனக் கூறி, ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் மனுவில், தற்போதைய வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதால், மாதந்தோறும் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், “மாதம் ரூ.4 லட்சம் என்பது ஏற்கனவே பெரிய தொகை அல்லவா?” என்று கேள்வி எழுப்பியதோடு, முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பரில் நடைபெறவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2வது டெஸ்ட்: இந்தியா மோசமான பேட்டிங்… பாலோ-ஆன் அவமானம்!

More in Sports

To Top