Connect with us

49 கிலோ பளுதூக்கல் பிரிவு ரத்து – இந்திய வீராங்கனைக்கு பெரிய அதிர்ச்சி!

Sports

49 கிலோ பளுதூக்கல் பிரிவு ரத்து – இந்திய வீராங்கனைக்கு பெரிய அதிர்ச்சி!

புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஆனால் தற்போது அந்த பிரிவு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவருக்கு புதிய சவால் உருவாகியுள்ளது.

சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து பல எடைப்பிரிவுகளில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான 49 கிலோ பிரிவு நீக்கப்பட்டு, புதிய எடைப்பிரிவுகள் 53, 61, 69, 77, 86 கிலோ மற்றும் 86 கிலோ மேல் என ஆறு பிரிவுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு, 49 கிலோ பிரிவு நீக்கப்படும் என்ற தகவலின் பேரில் மீராபாய் சானு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 48 கிலோ பிரிவுக்கு மாறி பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஆனால் தற்போது அந்த மாற்றத்திற்குப் பிறகும் மீண்டும் புதிய எடைப்பிரிவில் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த 31 வயதான மீராபாய் சானு, இனி 53 கிலோ பிரிவில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது உடல் எடை, பயிற்சி முறை, சக்தி சமநிலை ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டியிருப்பது அவருக்கு ஒரு கடினமான சவாலாக பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம், இந்திய பளுதூக்குதல் அணிக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மீராபாய் சானுவின் புதிய முயற்சியை அனைவரும் ஆர்வமாகக் கவனித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சஞ்சு சாம்சன் நீக்கம்: ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தி

More in Sports

To Top