Connect with us

ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் கிடைப்பது சாத்தியமில்லை.” – மனு பாக்கர்

Sports

ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் கிடைப்பது சாத்தியமில்லை.” – மனு பாக்கர்

புதுடெல்லி:
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், அண்மையில் எகிப்தில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாமல், பதக்கம் தவறியுள்ளார். உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்த இந்த போட்டியில் பதக்கம் வெல்வதையே இலக்காக கொண்டு இறங்கிய மனு பாக்கருக்கு, இம்முறை அதிர்ஷ்டம் கூடியவில்லை.

இந்த தோல்வி குறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் விரிவாகப் பேசிய போது,
“உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் கனவோடு போட்டியில் கலந்து கொண்டேன். என் செயல்பாடு உண்மையில் நன்றாகவே இருந்தது. தொடர்ந்து நல்ல ஸ்கோரையும் பதிவு செய்தேன். ஆனால், இறுதியில் பதக்க மேடையில் நிற்க முடியவில்லை. அதேசமயம், என் சக வீராங்கனை இஷா சிங் பதக்கம் வென்றதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

விளையாட்டில் தினமும் உச்சத்துக்கு செல்வது சாத்தியமில்லை. சில நாட்களில் வெற்றிகள் வரும்; சில நாட்களில் தோல்வியும் தவிர்க்க முடியாது. இது ஒரு இயல்பான சுழற்சி.

என்னைப் பொறுத்தவரை, நான் மட்டுமே பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இல்லை. இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பதே முக்கியம். அந்த பதக்கத்தை யார் வென்றாலும், அது நமது நாட்டின் பெருமை. அதற்காக நான் எப்போதும் உற்சாகப்படுவேன்,” என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த உரை, விளையாட்டு மனப்பான்மையையும், அணிச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் தற்போது பரவலாக பாராட்டப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

More in Sports

To Top