Connect with us

ஓடிடியில் வெளியாகிறது “Manjummel Boys” – எப்போது தெரியுமா..?

Cinema News

ஓடிடியில் வெளியாகிறது “Manjummel Boys” – எப்போது தெரியுமா..?

திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த ‘Manjummel Boys’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுவாக மலையாள திரையுலகில் மினிமம் பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெற்றி படங்களாக உருவெடுக்கும் அந்த வரிசையில் தற்போது Manjummel Boys திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வலம் வருகிறது.

அனைத்து மொழிகளிலும் பட்டயகிளப்பி வரும் இப்படம் தமிழ் ரசிகர்கள் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா நட்சத்திரங்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

Manjummel Boys படத்தை பார்த்த தனுஷ் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , உதயநிதி ஸ்டாலின் என ஏரளமான திரை பிரபலங்கள் Manjummel Boys படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர்.

இதுமட்டுமின்றி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனபடி மே 3 ஆம் தேதி அணி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக அழகிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top