Connect with us

மம்மூட்டி, ஜோதிகா நடித்த Kaathal The Core படம் ஓடிடி ரிலீஸ் வெளியானது!!

Cinema News

மம்மூட்டி, ஜோதிகா நடித்த Kaathal The Core படம் ஓடிடி ரிலீஸ் வெளியானது!!

மம்மூட்டி கம்பெனியில் பல படங்கள் அதிரடியாக தயாராகி தியேட்டரிலும் ஓடிடியிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. சிபிஐ 5 தி பிரைன், ரோர்ஷா, கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வந்த இந்த படங்களுக்கு பெரும் வரவேற்பு ஓடிடியில் கிடைத்தன.

இந்நிலையில், அடுத்து காதல் தி கோர் திரைப்படம் ஓடிடிக்கு வருகிறது. கேரள ரசிகர்களை தாண்டி மலையாள படங்களை மற்ற மொழி ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு சென்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகும் மலையாள படங்களை ஓடிடியில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

பசில் ஜோசப்பின் ஜெய ஜெய ஜெய ஜெயஹே கடந்த ஆண்டு வெளியான ஃபாலிமி உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மம்மூட்டி படங்களை பற்றி சொல்லவே வேண்டாம் அனைத்து படங்களையும் ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து விடுகின்றனர்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜோ பேபி இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான காதல் தி கோர் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் நேற்று இரவு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகப் போவதாக தற்போது மம்மூட்டி ட்வீட் போட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in Cinema News

To Top