Connect with us

“தங்கலான் டப்பிங்கில் மிருகமாய் மாறிய நடிகை மாளவிகா மோகனன்! வைரல் வீடியோ!”

Cinema News

“தங்கலான் டப்பிங்கில் மிருகமாய் மாறிய நடிகை மாளவிகா மோகனன்! வைரல் வீடியோ!”

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. சியான் விக்ரமை வைத்து தங்கலான், சூர்யாவை வைத்து கங்குவா உள்ளிட்ட படங்களை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இயக்குநர் அமீர் உடனான மோதல் காரணமாக சர்ச்சை வெடித்த நிலையில், சமீபத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு தனது பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

தங்கலான் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சியான் விக்ரம் இல்லாமல் மாளவிகா மோகனன் மட்டும் காட்டுகின்றனரே என நினைத்த ரசிகர்கள் இவராவது வசனம் பேசுவாரா என்று பார்த்தால் அவதார் ஹீரோயின் போல இவரும் காட்டுப்பூச்சி போல கத்துகிறார். படத்தில் எல்லாருக்கும் இதுதான் வசனமா? என்கிற கேள்வி எழுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் கத்துவதும், வித்தியாசமான ஒலிகளை எழுப்புவதும் போலவே வீடியோ வெளியாகி உள்ளது. பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் கடைசியாக வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியடையாத நிலையில், தங்கலான் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா பா. ரஞ்சித் என்றும் ரசிகர்களை கவரும் விதமாக அந்த படம் இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top