Connect with us

மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படத்தின் முதல் விமர்சனம் இதோ..!

Cinema News

மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படத்தின் முதல் விமர்சனம் இதோ..!

கோலிவுட்டில் அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், டோலிவுட்டில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆனால், மகேஷ் பாபுவின் மாஸ்க்கு முன்னால் ஹனுமான் படம் அதிக தியேட்டர்கள் கூட கிடைக்காமல் திண்டாடி வருவதாக கூறுகின்றனர்.

கடைசியாக கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி உடன் இணைந்து மகேஷ் பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக எந்தவொரு புதிய படத்தையும் ரிலீஸ் செய்யாத மகேஷ் பாபு இந்த மகர சங்கராந்திக்கு குண்டூர் காரம் படத்தை நம்பி இறக்குகிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மகேஷ் பாபுவுக்கு இந்த படத்தில் டோலிவுட்டின் இரு இளம் நடிகைகள் ஹீரோயினாக மாறி உள்ளனர். ஸ்ரீலீலா மற்றும் கோட் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி என இருவருமே போட்டிப் போட்டு நடித்து வரும் நிலையில், இந்த படத்துக்கான முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. படத்தை நிஜாம் ஏரியாவில் வாங்கி வெளியிடும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு நேற்று சிறப்பு காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது.

அதை பார்த்த அவர், “பிளாக்பஸ்டர்” என்றும் “அலா வைகுந்தபுரமுலோ படத்தை விட அருமை” என்றும் விமர்சனம் செய்துள்ளார். தணிக்கை செய்யும் போது படத்தை பார்த்தவர்களும் படத்தை பாராட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை மகேஷ் பாபு வசூல் வேட்டை நடத்துவார் என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH - LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top