Connect with us

அஜித்–ரஜினி படங்களை ஓவர்டேக் செய்த ‘மாமன்’… ரசிகர்கள் கமெண்ட்ஸில் கலவரம்!

Cinema News

அஜித்–ரஜினி படங்களை ஓவர்டேக் செய்த ‘மாமன்’… ரசிகர்கள் கமெண்ட்ஸில் கலவரம்!

இந்த வருடம் அஜித், கமல், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆனாலும், கும்பகோணம் வாசு சினிமாஸின் ஆண்டு ரேட்டிங்கில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி சூரி நடித்த ‘மாமன்’ தான் அதிக வசூல் படமாக No.1 இடத்தைப் பிடித்துள்ளது.

சில ஏரியாக்களில் சில ஹீரோக்களுக்கு எப்போதுமே தனி பேஸ் இருக்கும். அந்த தியேட்டரில் எந்த படம் எவ்வளவு ஓடும் என்பதற்கே ஒரு வரலாறு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, டாப் ஹீரோக்களின் படங்களை கூட கடந்துவிட்டு, ‘மாமன்’ வசூலில் மரணமாஸ் காட்டியுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித்–ரஜினி ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸில் ட்ரோல் போட்டு சோஷியல் மீடியாவையே சூடாக்கி வருகிறார்கள்.

2025ம் ஆண்டு தொடங்கியது நேற்று மாதிரி, இப்போது நவம்பர் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டின் கடைசி மாதங்களிலும் பெரிய ரிலீசுகள் இல்லாததால், தியேட்டர்கள் வருடாந்திர ரேட்டிங் போட ஆரம்பித்துள்ளனர். அதில் வாசு சினிமாஸின் டாப் 5 வசூல் படங்கள்:

1️⃣ மாமன்
2️⃣ குட் பேட் அக்லி
3️⃣ டிராகன்
4️⃣ கூலி
5️⃣ தலைவன் தலைவி

தியேட்டர் நிர்வாகம் இதோடு சேர்த்து, “ஒவ்வொரு ஆண்டும் விஜய் படம் இருந்தால் தான் நாங்கள் safe. இந்த ஆண்டு maintenance, current bill, staff salary கொடுக்க நிறைய struggle செய்தோம். விஜய் படம் ரொம்பவே மிஸ்!” என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த ஒரு வரி ரசிகர்களிடையே வெடிகுண்டு போல் பரவி, கமெண்ட்ஸ் பக்கம் கலவர பூமியாக மாறி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழில் பேச முயலும் ஸ்ரீலீலா – தமிழ் ரசிகர்களின் மனதை கவரும் நட்சத்திரம் 🎬💖

More in Cinema News

To Top