Connect with us

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!

திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படம் எப்போது ஓடிடிக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகை அன்று ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் படத்தை ரசிகனாக திரையரங்கில் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 🎬✨

More in Cinema News

To Top