Connect with us

லியோ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா..!வைரலாகும் தகவல்!

Cinema News

லியோ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா..!வைரலாகும் தகவல்!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘LEO’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது…இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது…

இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்…படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது..

கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த படம் வெளியாகி முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இதுவரையிலான வசூல் விவரம் வந்து இருக்கின்றது..

இந்நிலையில், ரூ.250-350 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 23 நாட்களில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக பலரும் சொல்லி இருக்கின்றனர் அதனால் நிச்சயம் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என சொல்லப்படுகின்றது பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top