Connect with us

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை சொன்ன தகவல்!”

Politics

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை சொன்ன தகவல்!”

“தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு, “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது.

இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

More in Politics

To Top