Connect with us

“KH 237 அறிவித்த வேகத்தில் அதிரடி சம்பவம்! படத்தின் Shooting குறித்த தகவல்!”

Cinema News

“KH 237 அறிவித்த வேகத்தில் அதிரடி சம்பவம்! படத்தின் Shooting குறித்த தகவல்!”

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன், கல்கி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் பிரபாஸுடன் கமல் இணைந்து நடித்துள்ள கல்கி, இந்தாண்டு மே 9ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியன் 2ம் பாகம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிலும் கமல் கலந்துகொள்ளவுள்ளார்.

நாயகன் படத்துக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தக் லைஃப் படத்தில் கமலுடன் மலையாள நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், துல்கர் சல்மான், கோலிவுட்டில் இருந்து ஜெயம் ரவி, த்ரிஷா, கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராய் கமலுக்கு ஜோடியாக நடிக்கலாம் என எத்ர்பார்க்கப்படுகிறது.

தக் லைஃப் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் தான், அன்பறிவ் இயக்கத்தில் KH 237 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் வெரைட்டியாக மிரட்டவுள்ளாராம். கேஜிஎஃப், விக்ரம் உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றிய அன்பறிவ் மாஸ்டர்ஸ், கமலின் KH 237 மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளனர்.

இதனால் KH 237 ஸ்க்ரிப்ட் தாறுமாறாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக லோகேஷ் கனகராஜ் அல்லது ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் மூலம் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்குநராக அறிமுகமாகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது உலக நாயகன் கூட்டணியில் இந்த ஆக்‌ஷன் பிரதர்ஸ் இணைந்துள்ளனர். இந்நிலையில், KH 237 ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top